முன்னாள் உலக அழகி, இந்தியாவின் கவுரவம் மிகுந்த சூப்பர் ஸ்டார் அமிதாப் வீட்டு மருமகள் என்பதாலேயே சினிமாக்காரர்கள் மரியாதை கொடுக்கவில்லை. சிறந்த நடிகையும் ஆவார் என்பதால் அந்த கவுரவம்.
இதனால் அவர் சொல்வதெல்லாம் வேதம் என்றாகிவிடுமா?
அண்மையில் அவர் நடித்து வெளியான படமும் ஊத்திக் கொண்டது.
சித்தார்த்-கரிமா என்கிற இரட்டையர்கள் கதை சொல்வதில் வல்லவர்கள்.
இவர்கள் ஒரு கதையை ஐஸ்வர்யாராயிடம் சொன்னார்கள். படத்தின் பெயர் ஜாஸ்மின்.
வாடகைத்தாயைப் பற்றிய உருக்கமான கதையாம்.
இந்த கதையில் முன்னாள் உலக அழகி நடிக்கவில்லை.
ஏனாம்?
“கதையில் சில திருத்தம் சொன்னேன். அந்த திருத்தங்களை அவர்கள் செய்வதாக இல்லை.அதனால் அந்த கதையில் நடிக்கவில்லை”என்கிறார் ஐஸ்வர்யா .
இதன் பெயர்தான் ஈகோவா?