கடந்த இரு தினங்களாக சர்கார் படம் பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் பெரிதும் அலசப்பட்டன. தங்கள் சைடுக்கு வலு சேர்க்க சில தயாரிப்பாளர்களையும் இறக்கி விட்டிருந்தார்கள். ஆனால்
தனது செங்கோல் கதையத்தான் முருகதாஸ் திருடி இருக்கிறார் என்று உதவி டைரக்டர் வருண் ராஜேந்திரன் கோர்ட்டுக்குப் போனார்,
முருகதாஸ் பல உதாரணங்களுடன் சர்கார் கதை தனது கற்பனை என வரவழைக்கப்பட்ட செய்தியாளர்களிடம் பேசினார்.
எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் பாக்யராஜ் புகாருக்குரிய கதையைப் படித்துவிட்டு வருண் ராஜேந்தரனின் கதைப் போல்தான் சர்கார் இருக்கிறது என சொல்லி விட்டார்.
இதற்கிடையில் இன்று நீதி மன்றத்தில் ஆஜரான முருகதாஸ் “சமரசம் ஏற்பட்டு விட்டதாக “நீதிபதியிடம் சொன்னார், பட நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் சொன்னார்கள்.
வருணுக்கு ஆஜரான வழக்குரைஞர் வராததால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
முருகதாஸ் கதை என்றாலே இத்தகைய சிக்கல்கள் வருவது சகஜமாகி இருக்கிறது. பாக்யராஜ் சொன்னதை முருகதாஸ் முன்னதாகவே கேட்டிருந்தால் இத்தகைய அவமானங்களை தவிர்த்திருக்கலாம்.
சமரசம் என்பது வருண் ராஜேந்திரனின் கோரிக்கையின் அடிப்படையிலேயா என்பது தெரியவில்லை.
டைட்டில் கார்டில் கதை என்கிற இடத்தில் தனது பெயர் போடப்பட வேண்டும் சன்மானமாக இருபது லட்சம் வழங்கப்பட வேண்டும் என்பதாக வருண் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும்,வருணின் கோரிக்கையை சர்கார் படக்குழு ஏற்றுக் கொண்டதால், இரு தரப்பினரும் சமரச முடிவுக்கு வந்தனர். இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி சுந்தர் தெரிவித்தார். மேலும் சர்கார் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.