ஆமீர்கான் நடிப்பில் வெளியாகியு ள்ள’ பிகே ‘திரைப்படத்திற்கு வட இந்திய இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத் திரைப்படம் மறைமுகமாக லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடித்து பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் பிகே. இந்த திரைப்படத்தில் வேற்றுகிரகவாசி ஏலியனாக ஆமீர்கான் நடித்துள்ளார்.இந்த உலகம் அவருக்கு புதிது என்பதால், கடவுள் நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து பல்வேறு கேள்விகளை ஆமீர்கான் முன்வைப்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.தொலைகாட்சிகளில் சொற்பொழிவாற்றும் இந்து சாமியார் ஒருவரிடம் எக்கு தப்பாக கேள்விகள் கேட்பது போன்ற காட்சியும், கோயிலில் அங்கபிரதட்சணம் செய்வோரை பார்த்து கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டமான வழிபாட்டு முறையை அங்கீகரிக்கிறார் என்று கேட்பது போலவும் காட்சிகள் உள்ளனவாம் . , சர்ச்சில் வெள்ளை நிற ஆடையுடன் நிற்கும் திருமணப் பெண்ணை பார்த்து உங்கள் கணவர்இறந்து விட்டாரா ! என்று கேட்பது போன்ற காட்சியும், கதாநாயகி அனுஷ்கா, பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியரை காதலிப்பது போலவும் காட்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளனவாம்.. எனவே வட இந்திய இந்து அமைப்புகள் பல இப் படத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன.