தற்போதுதான் சினிமாக்காரர்களுக்கு சற்று தைரியம் வந்திருக்கிறது. .ஆதாரமற்ற புகார்களுக்கு மீ டூ இயக்கத்தில் பட்டம் சூட்டுவதால் பலன் எதுவுமில்லை என்பதை அனைவரும் அறிந்தே இருந்தாலும் ஏதோ ஒரு வகை பயம்.அந்த பயம் போய் விட்டது,என்றே தற்போது நினைக்கவேண்டியதிருக்கிறது.
‘எவனும் புத்தனில்லை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் ஆர்.வி .உதயகுமார் பேசினார்.கேப்டன் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோரை இயக்கியவர்.
‘ஆண், பெண் ஈர்ப்பு என்பது மனித இனத்தின் அடிப்படையான குணங்களில் ஒன்று. அந்த ஈர்ப்புக்கு ஒரு வரைமுறை உண்டு. அந்த வரைமுறை தாண்டப்பட்டால் அதை அப்போதே கண்டித்திருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலே தவறு இல்லை என தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கையில் மீடூ மட்டும் எப்படி தவறாகும்?
இதை ஒரு பெரிய பிரச்சனையாக அனைவரும் ஊதிப் பெரிசு ஆக்குகிறார்கள். அப்படி எல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையே தவறில்லை எனக்கூறியுள்ளது. இதைவிட கள்ளக்காதல் ஒன்றும் தவறில்லை. இப்படி இருக்கையில் மிடூ மூலம் தப்பு சொல்லலாமா?. சின்மயி உலகில் உள்ள எல்லா ஆண்களையும் திருத்தி விடுவாரா?’ .என்று கேட்டார்.
இதற்கு சின்மயி இன்னும் பதில் சொல்லவில்லை.