ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ் M இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். ‘V.S.O.P’ என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ராஜேஷ் மூவரின் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள். சமீபத்தில் வெளியான V.S.O.P டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மீண்டும் ஆர்யா சந்தானத்துடன் கூட்டணி அமைத்த மகிழ்ச்சியை நம்மிடையே பகிர்கிறார்.
“காதல், ஃப்ரெண்ட்ஷிப், காமெடிதான் நம்ம ஏரியா மக்களும் நம்மிடம் இருந்து அதைதான் எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்வதுதான் நமக்கும் உத்தமம்” என்று ஆரம்பித்தார் இயக்குனர்.
“ V.S.O.Pனா ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ இருவரும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இவர்கள் இடையே பெண்களால் ஏற்படும் விளைவுகளை மிக கலாட்டாவாக சொல்லியிருக்கிறோம். படம் முழுக்க இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் நிஜ வாழக்கையில் எப்படி கலாய்த்து கொள்வார்களோ அதே இயல்புடன் வருகிறார்கள் ஆர்யாவும் சந்தானமும் வருகிறார்கள்.”
“ ரசிகர்கள் அனைவரையும் டீசர் கவர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. படத்தின் ஒற்றை பாடல் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நிரவ் ஷா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்ள, D இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது V.S.O.P. ஆகஸ்ட் 14ஆம் தேதி மக்கள் மகிழ்ந்திட திரையரங்குகளில் V.S.O.P வெளியாகவுள்ளது. உங்கள் நண்பர்களோடு நீங்கள் கழித்த அந்த ஜாலியான நாட்களை இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மீண்டும் நினைவில் நிறுத்தும்.” எனக் கூறினார் இயக்குனர் ராஜேஷ்.