சர்கார் கதை தன்னுடையது என்று கூறிய உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் கோர்ட்டுக்கு சென்று போராடி வெற்றியும் கண்டுள்ளார். சர்கார் படத்தின் டைட்டிலில் வருண்ராஜேந்திரனின் பெயரையும் 30 வினாடிகள் காண்பிக்க உள்ளனர். இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுஅவர் கூறியிருப்பதாவது,
‘வழக்கம் போன்று நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் சின்ன விளக்கம் அளிக்கிறேன். பாக்யராஜ் சார் வந்து என்னை கூப்பிட்டு இந்த மாதிரி பிரச்சனை போய்க் கிட்டுருக்கு,ஒருவனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் என்ற கதையை அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்துள்ளார்.அந்த ஒரு கரு, அந்த ஒரு ஸ்பார்க். மற்றபடி இந்த கதைக்கும், அந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நமக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் கதையை பதிவு செய்துள்ளார் என்பதற்காக அவரை பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் படம் தொடங்கும் போது ஒரு டைட்டில் கார்டு போடுங்கன்னார்.நானும் சரி என்று ஒத்துகிட்டேன் .அந்த வகையில் மட்டும் தான் நான் படத்தில் அந்த லெட்டரை வெளியிடுகிறேன். மற்றபடி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையவே கிடையாது. ‘ஹேப்பி தீபாவளி என்ஜாய் ‘ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/ARMurugadoss/status/1057204885475680257