படத்தின் தயாரிப்பு நிறுவனம் திமுகவுக்கு நெருக்கம். சன் பிக்சர்ஸ். நடித்திருக்கும் தளபதி விஜய்யோ அதிமுக அரசுக்கு அவ்வப்போது ஆப்பு அடிப்பவர். அவரது படத்தை அதிகாலை 5 மணிக்கே பார்க்கவிடுவோமா?
பார்க்கவிடமாட்டார்கள் என்று நம்புகிறார் ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் முக்கிய அதிகாரி ரேவந்த்.
“அதிகாலை 5 மணி ஷோ என்பது கேள்விக்குறிதான்! இந்த மனிதருக்கு எதிராக வெறுப்பும் பலி வாங்கும் உணர்வும் மறுபடியும் ஆரம்பமாகி இருக்கிறது.” என்பதாக டுவிட் போட்டிருக்கிறார்.
விஜய்யின் அதிமுகவுக்கு எதிரான பேச்சை அமைச்சர்கள் ரசிக்கவில்லை என்பதின் எதிரொலியே என்கிறார்கள்.