தனக்கென தனித்த பெரிய மார்க்கெட் உள்ளவர் நடிகர் சூர்யா. அலட்டல் இல்லாமல் சுலபத்தில் சிகரம் தொட்டு கொடியை ஏற்றி விடுவார்.
செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. என்கிற மிகப்பெரிய படம் முடியும் கட்டத்தில் இருக்கிறது,
சூர்யா ,மோகன்லால்,சமுத்திரக்கனி சாயீசா,ஆர்யா பொம்மன் இரானி என பெரிய தலைகளை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படமும் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.
அடுத்து இறுதிச்சுற்று இயக்குநர் சுதா இயக்கத்தில் ஒருபடம் 2௦19-ல் தொடங்குகிறது. சூர்யா 38 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் படத்தை முடித்து விட்டுத்தானே பெயரை சொல்லுகிறார்கள்.
அடுத்ததுதான் மிகப் பெரிய பெரிய படம். அதாவது அடுத்த ஆண்டிலிருந்து வருடத்துக்கு 3 படங்கள் என திட்டமிட்டு சன் நிறுவனம் திரைத் தொழிலில் ஈடுபடுகிறது.
சூர்யா 39 என்கிற தற்காலிக பெயரில் ஹரி இயக்குகிற படம்.
“வழக்கமான கதையாக இல்லாமல் வித்தியாசமான திரில்லர் மூவியாக இருக்கும் “என்பதை முன்னமே சொல்லி இருக்கிறார் ஹரி. சன் நிறுவனத்தைப் போல லைகா நிறுவனமும் ஆண்டுக்கு இரண்டு என்கிற கணக்கில் படத் தயாரிப்பில் இறங்குகிறது என்கிறார்கள்.
இந்த இரு நிறுவனங்களைப் போலவே கலைப்புலி தாணுவும் பெரிய படங்களைக் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்.