வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு. தற்போது தனது பெயரை விஷ்ணு விஷால் என மாற்றியுள்ளார். நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய அவரிடம், ‘ ,இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி பெரிய ஹீரோ,
நீங்களும் வளர்ந்து வரும் ஹீரோ. யாருக்கு முக்கியத்துவம் என்பதில் உள்ள சிக்கலை எப்படி சமாளித்தீர்கள் ?எனக்கேட்டபோது, ‘நானும் விஜய் சேதுபதியும் நல்ல பிரண்ட்ஸ். வெண்ணிலா கபடிக்குழுவுல ஒருகாட்சியில வந்துட்டு போவாரு அந்த காட்சியை உற்று கவனிச்சா தெரியும். அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு என்கிட்ட கதை சொல்ல, அவரோட பிரண்டு ஒருத்தரை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அதனால் அவர் பெரிய ஹீரோவாகறதுக்கு முன்னாடியிருந்தே நானும் அவரும் பிரண்ட்ஸ் என்பதால் இந்த சிக்கல் இல்ல. ஆனால் ஒரு தகவல் சொல்றேன். இந்த படத்துல அவருக்கு மூணு பைட் இருக்கு. எனக்கு ஒண்ணுகூட இல்ல…என்றவர் மேலும் கூறியதாவது,
நான் விஷால், ஆர்யாவெல்லாம் திக் பிரண்ட்ஸ். அவங்க எங்க இருக்காங்களோ அங்க நான் இருப்பேன். இந்த நடிகர் சங்க விஷயத்தை பொருத்தவரை விஷால் பக்கம் நியாயம் இருக்குன்னு தோணுச்சு. சும்மாவே அவர் பக்கம் நிற்கும் நான், இப்ப நிக்க மாட்டேனோ?’ என்றார்
விஷ்ணுவிஷால் ,நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் நட்ராஜின் மகளைதான் காதல் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.