“உலகிலேயே மிகப்பெரிய உயரமான சிலை இந்தியாவில் இருக்கிறது. வல்லபாய் படேல் சிலை நிறுவ 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது “
இப்படி எதிர்வரும் காலத்து மாணவர்கள் தேர்வில் எழுதக்கூடிய சடங்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
சிலை மிகப்பெரிய சாதனை,! விடுதலைப் பெற்ற பிறகு தனித்து இயங்கிய சமஸ்தானங்களை ஒன்றிணைத்த காங்கிரஸ் அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் .இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர்,
உலகின் உயரமான சிலைகளுடன் ஒப்பிட்டு உலகத்தினர் பேசக் கூடிய நிலையை உருவாக்கிப் பெருமையை சேர்த்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. குஜராத் தேர்தலுக்கு படேல் சிலை மிகவும் துணையாக நிற்கும்.
இவ்வளவு அதிகமான பொருட்செலவில் சிலை அவசியமா இன்றைய பொருளாதார நெருக்கடியில்? பலர் கேட்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் சித்தார்த்.
“தேவை இல்லாத , மரியாதை இல்லாத வழியில் நாட்டின் மிகச்சிறந்த தலைவர் இன்று குஜராத்தில் கொண்டாடப்படுகிறார்.தேர்தலுக்காக பட்டேலை பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பட்டேல் உயிருடன் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய தொகையை சிலை வைக்க அனுமதித்திருக்க மாட்டார்.அவரைப் பற்றி போதுமான அளவு இவர்களுக்கு தெரியவில்லை.”கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள்.நாம் வரி கட்டுகிறோம்”என்றவர் வல்லபாய் பட்டேல்.
இப்படி சொல்லி இருக்கிறார் சித்தார்த்.
இந்த சிலையைப் பற்றி உலக அளவில் தெரிந்து கொள்வதற்காக பத்து மொழிகளில் குறிப்பு கொடுத்திருக்கிறார்கள் அவற்றில் ஒரு மொழி உயர் மொழி தமிழ். பெருமையாக இருக்கிறது. ஆனால் முழுவதுமே பிழைகள் . பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.