‘கவிதை எங்கே? காவியம் எங்கே? காதலர் முன்னே ஆயிரம் இங்கே!’ என்று கவிஞர் சொன்னார் ,ஆனால் அமலாபாலோ ‘அத்தனையும் ஏமாற்றமே’ என்கிறார் .ம்ம்ம்ம் ,,அது அவரது அனுபவம்!
ஏஎல்.விஜய்யை காதலித்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சபை கூட்டித்தான் தாலி கட்டிக் கொண்டார். ஆனால் மாப்பிள்ளையின் வீடு கலாச்சாரம் சார்ந்தது. மனம் ஒத்துப்போனவர்கள் எங்கேயோ இடறினார்கள். இருவரையும் விவாகரத்து விடுவித்தது.
இனி அடுத்த திருமணம்?
அமலாபால் என்ன சொல்கிறார்?
“எனது முதல் திருமணம் எனது முடிவாக அமைந்திருந்தது.ஆனால் அது வெற்றிகரமாக அமையவில்லை.
இரண்டாவது கல்யாணம்?
அது அம்மா அப்பா முடிவாகத்தான் இருக்கும். பெற்றோர்களின் முடிவு பிழையின்றி இருக்கும்.புத்திசாலித்தனமாக முடிவு எடுக்கக்கூடியவர்கள். அவர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே எனது மணாளன்”என்கிறார் அமலா.