புரட்சிக்கலைஞர் சரத்குமாரின் புதல்வி வரலட்சுமி. அண்மையில் வெளியான சண்டக்கோழி.2 படத்தில் வில்லி. மற்றும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரையும் விஷாலையும் இணைத்து எத்தனையோ காதல் செய்திகள் .அத்தனையும் உண்மைதானா? அவர் விஷாலைத் திருமணம் செய்து கொள்வார் என்பது நிஜம் ஆகுமா?
இனி வரலட்சுமியின் வாய்ஸ்.
“யார் சொன்னது நானும் விஷாலும் காதலர்கள் என்று? அவர் சொன்னாரா, இல்ல நான் சொன்னேனா? நானும் விஷாலும் நல்ல நெருக்கமான நண்பர்கள். கருத்துகளை ஷேர் செய்துக்குவோம்.காதலிக்கிறோம், டேட்டிங் போறோம் என்பதில் துளி அளவும் உண்மை இல்ல.அவருடன் நான் திருமணம் என்பதும் உண்மை இல்லை. ஏன் இணைத்துப் பேசுகிறீர்கள் என்பது புரியல”
“அரசியலுக்கு வருவீர்களா ,இந்த செய்தியும் பொய் என்பீர்களா?”
“இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்.! இங்க வெற்றிடம் இருக்கு என்பது உண்மை. அந்த இடத்தை கமல்,ரஜினி நிரப்புவார்களா என்பதெல்லாம் இப்ப சொல்ல முடியாது. மக்கள் முடிவு என்னங்கிறது நமக்கு தெரியாதுல்ல. ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியா இருந்தவங்க. அவங்களை மூணு தடவை சந்திச்சுப் பேசி இருக்கேன். நான் அரசியலுக்கு வருவேன், எந்த கட்சி என்பதெல்லாம் இப்ப சொல்ல முடியாது”என்கிறார் வரு சரத்.
வாங்கம்மா வாங்க, வந்து நீங்களும் சேர்ந்து கலக்குங்க.!