புதிய வரவுகளின் வீச்சு வீரியமாக இருந்ததால் ஹன்சிகா போன்ற நடிகைகள் கரையோரமாக ஒதுங்கி உட்கார வேண்டியதாகிவிட்டது,.
பொதுவாக மார்க்கெட் மந்தமாகும்போது கல்யாணம் என்பது அவர்களுக்கு வரப் பிரசாதம்.
சிலருக்கு ஒரு மொழி கை விட்டால் இன்னொரு மொழி கை கொடுக்கும். ஹன்சிகா நம்பி இருந்த தமிழ்,தெலுங்கு இரண்டுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.
எதனால் இப்படி?
“நான் கிளாமர் பண்ணுவதில்லன்னு முடிவு எடுத்திருக்கேன். பெண்ணை முன்னிறுத்தும் படமாக இருக்கணும். அல்லது நல்ல கதை அம்சங்களுடன் இருக்கணும்.இப்படி இருந்தால்தான் படம் பண்ணனும். வயசு இப்பத்தான் 27 ஆகுது. அதனால அவசரப்படாம முடிவு செய்யலாம். இந்த வருஷம் பதினெட்டு கதை கேட்டு நாலுதான் தேறுச்சு
“ கல்யாணம் பண்ணிக்கலாமே ?”
“அவசரப்படல.இனி எங்கம்மாதான் அத முடிவு பண்ணனும்.அவங்க பார்த்து யாரை கை காட்டுறாங்களோ அவங்களுக்கு நான் கழுத்த காட்டுவேன்.” என்கிறார் .
சிம்புவுடன் காதல் தோல்வி என்பதால் இந்த முடிவு என்று தெரிகிறது.