தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா அவருடன் உறுமீன்’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா மேனனை காதலித்து வருவதாகவும் , விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க வுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், பாபிசிம்ஹா தன் திருமணம் குறித்து விளக்கம் அளித்துவிட்ட நிலையில் ,தற்போது ரேஷ்மா மேனனும் இதுகுறித்து வாய் திறந்துள்ளார்.
என் திருமணம் குறித்து இப்போதைக்கு எந்தப் பதிலும் என்னிடம் இல்லை. இப்போதைக்கு எனக்கு படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்குவது மட்டும்தான் குறிக்கோள். பாபி சிம்ஹாவுடன் திருமணம் என்று பேசுவதையே தவிர்க்கலாம் என நினைக்கின்றேன். நாளைக்கு வேறு ஒரு வதந்தி வந்தால், இந்த காதல் பற்றிய வதந்தியை மக்களே மறந்துவிடுவார்கள். இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்து நான் அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.இதற்கிடையே பாபிசிம்ஹாவுக்கும்,ரேஷ்மா மேனனுக்கும் வருகிற ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் பாபி சிம்ஹா நண்பர்கள் வட்டாரம் உறுதியாக கூறுகிறது. உறுமீன் படக்குழுவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் இருவரின் திருமணச் செய்தி யை மறுக்க வில்லை!