பழைய கதைகளை தூசு தட்டிப் படிப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது.
பழைய சோறும் ருசிதான்!
இப்படி பழசுகளுக்கு ருசி.
பழைய குழம்பை சுண்ட வைத்து சாப்பிடுவது பரம சுகம்.
பழசிராஜா படத்தில் வாய்ப்பு பறி போன கதையை தற்போது சப்புக் கொட்டி சொல்வதில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அல்வா சாப்பிட்டமாதிரியான சுவை.!
“பழசிராஜாவில் நல்ல கேரக்டர். மம்மூட்டிக்கு மனைவி என்பதால்.! பூஜைக்குப் போய் இருந்தேன்.! பிறகு திருவனந்தபுரத்துக்கு போய் இருந்தேன். அங்க டைரக்டர் ஹரிகரன் வந்திருந்தார்.
என்னை சாயங்காலம் சந்திக்கவேணும்னு சொன்னார்.
“முடியாது!”
“உங்களைப் பார்க்கவே வந்திருக்கிறேன்.”என ஹரிகரன் குரலில் அழுத்தம்.
“முடியாது.நான் சாயங்காலமே சென்னைக்குத் திரும்பனும்.!”
“உங்களை பார்க்கவே நான் வந்திருக்கிறேன் “என குரலில் கடுமை கட்டினார்.
நான் நன்றாக திட்டிவிட்டு வந்து விட்டேன். அவர் பெரிய ஆளுன்னு சொன்னாங்க. இருக்கட்டுமே.!அப்படிப்பட்ட பெரிய ஆளு ஏன் இப்படி நடந்துக்கிறார். வாய்ப்பு இல்லாம போனதுக்கு இதுதான் காரணம்” என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.