கேரளாவைச் சேர்ந்த உமேஷ் கேசவன் வயநாடு உதவிக் கலெக்டராக இருக்கிறார். அங்கு வாழ்கிற மலைவாழ் சிறுவர்களது பிரச்னைகளை தீர்ப்பதற்கு தளபதி விஜய்தான் பெரும் துணையாக இருக்கிறார்.
இது எப்படி சாத்தியம்.?
“அந்த சிறுவர்களுக்கு தமிழ் தெரியாது.கொஞ்சம் கொஞ்சம் தெரியும், அவ்வளவுதான்.! அவர்கள் விஜய்யின் பரம ரசிகர்கள். அவர்களது பிரச்னைகளை சால்வ் பண்ண விஜய்யுடன் இருக்கும் எனது கார்டை காட்டினால் போதும்.சுலபத்தில் சிக்கல் தீர்ந்துவிடும் “என்கிறார் உதவி கலெக்டர் .
பைரவா படப்பிடிப்புக்காக விஜய் வந்திருந்தபோது உதவி கலெக்டர் அவரை சந்தித்து மலைவாழ் சிறுவர்களின் பிரச்னையைப் பற்றி பேசி இருக்கிறார்.