இந்திய ரசிகர்களின் கனவுப்படம்தான் 2.௦.
இந்திய திரை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை சத்யம் திரை அரங்கில் தொடங்கிய படத்தின் விழாவில் பனிரெண்டு மணிக்கு டிரைலரை வெளியிட்டார்கள்.
இயக்குநர் ஷங்கர், அக்ஷை குமார், ஏஆர்ரகுமான், எமி ஜாக்சன் மற்றும் பல திரை உலகத்தினர் கலந்து கொண்டார்கள்.
விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் 3டி கண்ணாடி கொடுக்கப்பட்டது.
4 டிஎஸ் ஆர் ஒலிபரப்பு வழியாக முதலில் டீசர் வெளியானது.ஆனால் ஒலி சரியாக இல்லாததால் ஷங்கர் சொன்னபடி மறுபடியும் வெளியிட்டனர், கால்களுக்கு அடியில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டிருந்ததால் அனுபவம் புதுமையாக இருந்தது..பலூன் கொடுத்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்றவர்கள் மதிய உணவை லீலா பாலஸ் டாப் டக்கர் ஓட்டலில் வைத்திருந்தார்கள்.
4 டி சவுன்ட் சிஸ்டத்தில் படம் வெளியிடப்பட வேண்டும் என்பது தனது நான்கு ஆண்டு கனவு என்றார் ஷங்கர்.