அண்மையில் வெளியான படங்களில் இன்னமும் நிறைவாக போய்க் கொண்டிருக்கிற படம் 96. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிற போதே அதை கெடுக்கும்வகையில் தொலைக்காட்சியில் வெளியிடுகிறது சன்.
இது நீதியா, தர்மமா?
இப்படி பரவலாக சினிமாக்காரர்கள் பேசிக்கொண்டாலும் கேள்வி கேட்பதற்கு அஞ்சுகிறார்கள். தங்களது படங்களுக்கு போதிய விளம்பரம் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பயம்.
96 ஓடுகிற தியேட்டர்களில் கூட்டத்தை குறைத்து விட்டால் அந்த தியேட்டரில் சர்கார் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மை சன்னுக்கு இருப்பதாக யூகிக்க முடிகிறது. முன்னதாகவே முக்கால் வாசி பெரிய தியேட்டர்களை பிடித்து விட்டார்கள்.
இதைப்பற்றி கேட்பதற்கு அச்சமடைந்து சங்கங்கள் வாய் மூடிக்கிடப்பதால் திரிஷாவே துணிந்து கேட்டிருக்கிறார்.
“படம் வெளியாகி 5 வாரங்கள்தான் ஆகிறது.திரை அரங்குகளில் 80 சத விகிதம் கூட்டம் வருகிறது.இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் காட்டலாமா? நியாயமில்லை. பொங்கலுக்கு தள்ளி வைக்கலாமே” என்பதாக கேட்டிருக்கிறார்.
சத்தம் கேட்கும் என்று நினைக்கிறீர்களா?