எது நடக்காதோ அது நடக்கவேண்டும் என விரும்புகிறவர் உலகநாயகன் கமல்ஹாசன். நேர்மை ,நியாயம்,நீதி இவைகள் அரசியல்வாதிகளுக்கு அவசியம் என்பார். ஆனால் அதெல்லாம் அனாவசியம் என ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தப்பானவர்களை தேர்வு செய்வார் திருவாளர் பொது ஜனம் .
பிறகு குய்யோ முறையோ எனக் கதறுகிறவர்களும் மாண்பு மிகு மக்களேதான்!
மாணவ,மாணவியர்களை கல்லூரியில் சந்தித்துப் பேசி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.கேள்வி பதில் நிகழ்ச்சி உண்டு.
“ஐ.ஏ.எஸ் .,ஐ.பி.எஸ்.எழுதிஅதிகாரிகளைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் அரசியலில் முக்கிய பொறுப்புக்கு வருகிறவர்கள் பிரபலங்களாக மட்டுமே இருக்கிறார்கள்.சி.எம் .ஆகி விடுகிறார்கள் .இது சரியா?”
இது ஒரு மாணவியின் கேள்வி!
கமல்ஹாசனின் பதில் :
“சரியான கேள்வி. அந்த தேர்வுக்கான வினாத்தாளை நான் தயார் செய்து பதிலையும் சொல்லி வருகிறேன். வேறு யாராவது இப்படி செய்திருக்கிறார்களா?
தெரியாது!
தைரியமுடன் கூட்டத்தில் வந்து கேள்வியைக் கேளுங்க என்று இந்த அக்னிப் பரீட்சையில் நின்று, வென்ற பின்னர் நீங்கள் என் கற்பை சோதிக்க முடியாது.
என்னிடம் நேர்மை இருக்கிறது. அதுதான் எனது அரசியல் தகுதி”
இது கமலின் பதில்.!