நடிகர் திலகம் சிவாஜி கணேசன் -பத்மினியைப் போல சிறப்புடன் பேசப்பட்ட மற்றொரு ஜோடி உலகநாயகன் கமல்- ஸ்ரீ தேவி .
சிவாஜியும் பப்பியும் கல்யாணம் செய்து கொள்வார்கள் என்பது செய்தியாக இருந்து பின்னர் மாறியது. உறவில் திருமணம் செய்து கொண்டார் சிவாஜி.
இதைப்போல காதலர்கள் என கமல் ஸ்ரீ தேவியையும் இண்டஸ்ட்ரீ நம்பியது.
1976-ல் ஸ்ரீதேவியை மூன்று முடிச்சு படப்பிடிப்பில் கமல் சந்தித்தார். இதுதான் அவர்களது முதல் சந்திப்பு.
அப்போது ஸ்ரீ தேவிக்கு 13 வயது என்றால் நம்ப முடிகிறதா?
கமல் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் பல படங்களில் ஸ்ரீதேவிக்கு வசனம்,நடிப்பு சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார். இருவரது நெருக்கத்தைப் பார்த்தவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என நம்பினார்கள்.
ஸ்ரீ தேவியின் அம்மா ராஜேஸ்வரி யும் நம்பினார்!
இனி கமல் சொல்வதைக் கேட்போம்.
“ஸ்ரீதேவியை கல்யாணம் செய்துகொள்ளும்படி ராஜேஸ்வரி அம்மா என்னிடம் கேட்டதும் திகைத்துப் போனேன். “என் குடும்பத்துப் பெண்ணை எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்க முடியும்? எங்க வீட்டுப் பெண் மாதிரி நினைச்சு பழகிட்டிருக்கிறேன்” என்று சொல்லிட்டேன். நாங்கள் மரியாதையுடன் பழகி வந்தவர்கள், கடைசிவரை என்னை சார் என்றுதான் ஸ்ரீ தேவி அழைத்தார் “என்கிறார் கமல்