உப்புக்கண்டம் பச்சையாக இருந்தால் ருசி இருக்காது. நல்லா வெயிலில் சுக்காவாக காய்ந்து இருந்தால்தான் சுவை. நெருப்பில் வாட்டினால் எட்டூருக்கு மணக்கும், விவசாயி வயிறு நிறைய கஞ்சி குடிப்பான். அதைப் போல பழைய செய்திகளும் நினைவுக்கு வருமேயானால் அது தனி ரசனைதான்.
மோகன்லால் நடித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த ‘த்ரிஷ்யம் ‘படத்தை இந்தி,தமிழிலும் எடுக்க விரும்பினார்கள்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் தமிழில் நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகினார்.
“கதை நல்லா இருக்கு. ஆனா நான் போலீசாரிடம் அடிபடுவதை எனது ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். “என்று சொல்லி மறுத்துவிட்டார்.
மோகன்லால் அடி வாங்கியதை அவரது ரசிகர்களும் விரும்பவில்லை என்றாலும் படம் வெற்றி பெற்று விட்டது. மோகன்லால் அடிவாங்கும் சீனை பார்த்த ப்ரொட்யூசர் ஆண்டனி பெரும்பாவூருக்கே அதிர்ச்சி ” என்கிறார் ஜீத்து,