யுவன் சங்கர் ராஜா தற்போது, சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘தரமணி’, விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் ’யட்சன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துவருகிறார் .
மேலும், சிலம்பரசன் நடிக்கும் ‘கான்’ படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவனுடன் மீண்டும் கைகோர்த்திருப்பதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,கனடாவில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சிக்காக இரவு பகலாக ஒத்திகை நடத்தி வரும் யுவன் இன்று மயக்கம் போட்டு விழுந்தார்.. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
யுவனைப் பரிசோதித்த மருத்துவர் பல நாட்கள் சரியான உணவு, மற்றும் தூக்கமின்றி பணியாற்றியதாலும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொண்டதாலும் அவர் மயக்கமடைந்ததாக கூறியுள்ளனர். யுவன் சில நாட்களுக்காவது முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.