பொதுவா சினிமாவில் நடிகர்களின்பிறந்த நாள் பார்ட்டி என்றால் எப்படிப்பட்ட கொண்டாட்ட பார்ட்டியாக இருக்கும் என எல்லோருக்கும் தெரிந்த ஓன்று தான்.அதிலும் உச்ச நட்சத்திரம் என்றா கேட்கவும் வேண்டுமா? அப்படிப்பட்ட பார்டியாகத்தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளும் இருந்தது.அவர் நடித்துள்ள ஜீரோ படத்தின் ட்ரைலர் வெளியாகி ,24 மணி நேரத்தில் 54 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை செய்துள்ளது.இந்நிலையில் ஷாருக் பிறந்தநாள் அன்று ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு பிறகு ஒரு பிரபல ஹோட்டலில் அவர் தன் நண்பர்களுக்காக ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் வந்திருந்தனர்.பார்ட்டி நள்ளிரவை தாண்டி 3 மணி வரை அதிக சத்தத்தோடு நடந்துள்ளது. அதை கவனித்த போலீஸ் ஹோட்டலுக்கு வந்து உடனே பார்ட்டியை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.அதனால் ஷாருக்கின் பிறந்தநாள் பார்ட்டி பாதியிலேயே முடிந்துள்ளது.ஷாரூக்கானும் வேறு வழியின்றி வெளியேறினார்.