ஹாலிவுட்டில், கேட் பிளாஞ்செட், லில்லி ஜேம்ஸ், ரிச்சர்ட் மாடென் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் சின்ட்ரெல்லா. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இப்படத்தின் தலைப்பில் தமிழிலும், ஒரு படம் உருவாகிறது. ஆனால், இது அப்படத்தின் ரீமேக் இல்லையாம்.இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் இணை இயக்குன ராக பணியாற்றிய வினோத் வெங்கடேசன் என்பவர் இயக்குகிறார்.இதில், ஹாரார், பேண்டஸி, உள்பட எல்லா அம்சங்களும் உள்ளனவாம். சென்னையில் தொடங் கும் இப்படத்தின் கதை அடர்ந்த காட்டுக்குள் நடக்கிறது.இப்படக்காட்சிகளை வரும் அக்டோபர் மாதம் ஊட்டி அல்லது வெளிநாடுகளில் படமாக்க இருக்கிறோம். இதில்,ராய் லட்சுமி மூன்று கெட்டப்புகளில் வருகிறார். இந்தக் கதையை நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, எமி ஜாக்சன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட சில முன்னணி கதாநாயகிகளிடம் சொன்னேன் . ஆனால்,அவர்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தும், ஏனோ நடிக்கலை . ஆனால், ராய் லட்சுமி இக்கதை ரசித்து கேட்டதுடன் உடனடியாக ஒ.கே. சொல்லிவிட்டார். என்கிறார்.