சினிமாக்காரர்கள் பெரும்பாலும் உண்மையை அறியாதவர்கள். அந்தத் துறையில் அதற்கு அவசியமே இருப்பதில்லை.
“நான் கதையில் குறுக்கிடுவதில்லை.”என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு இணக்கமாக வசனம், கதையின் காட்சிகள் என வைக்கச் சொல்வார்கள்.
வாரிசு நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலும் சிபாரிசுகளின் செல்லப் பிள்ளைகள்தான்.!
அவர்களை வளர்த்து விடுவதில் இயக்குநர்களும் ஏனையோரும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அவர்களை சினிமாவின் வாசல், கட்டை போடாமல் வரவேற்கும்.
தனுஷிற்கு அநேகன் படத்தில் ஜோடியாக நடித்த அமிரா தஸ்தூரின் வயித்தெரிச்சலை கேளுங்கள்.
“”நான் வாய்ப்புகள் கேட்டு படிப்படியாக ஏறி இறங்கி இருக்கிறேன். அதை கணக்கிட்டால் திருப்பதி மலையில் ஏறி இறங்கியதற்கு சமமாக இருக்கும்.ஆனால் வாரிசுகளுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை. சுலபமாக வாய்ப்புகள் கிடைத்து விடும். அவர்களுக்கு எத்தகைய திறமை டெஸ்ட்களும் கிடையாது.”என்கிறார்.
மற்ற வாரிசுகள்தான் பதில் சொல்ல வேண்டும்.!