விடிந்தால் தீபாவளி. பட படாரென வெடிகள் வெடித்துச் சிதறும் . சர்க்கார் படம் வெளியாகும் தியேட்டர்களில் தீபாவளியும் தளபதி விஜய்யின் விழாவும் இணைந்து அதகளமாக இருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் ரசிகர்கள். அரசியலுக்கு வந்து விட்ட உணர்வில் ஒவ்வொருவரும் ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டியபடி “சர்க்கார். எங்கள் சர்க்கார் ” என்று சக நண்பர்களிடம் சொல்லிக் கொள்வதை பார்க்க முடிகிறது.
இன்று காலை சென்னை நகரின் பல பகுதிகளில் வித்தியாசமான சுவரொட்டிகள்.
தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்தவர்களுடைய படங்களை போட்டுவிட்டு “எது நடக்க இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும் ” என்பதாக எழுதி இருக்கிறார்கள். ஓட்டு மை இட்ட ஒற்றை விரலும் ,அதற்கு இணையான உயரத்தில் முஷ்டி காட்டும் விஜய்யின் படமும் போஸ்டரில் காணப்படுகிறது. இதை அச்சிட்டவரின் பெயர் ஸ்டாலின் மாஸ்கோ. புதுக்கோட்டைக்காரர். அடுத்த போஸ்டர் ‘மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே!’
அடி பின்னுங்கப்பா!