பொந்துக்குள் இருந்து இப்போதுதான் பாம்பு தலையைத் தூக்குகிறது.அது நச்சுப்பாம்பா. சாதாரண பாம்பா என்பது இனிதான் தெரியவரும்.
என்னய்யா இன்னும் பிஜேபி தரப்பு வாயைத் திறக்கவில்லையே என்கிறவர்களுக்கு இதோ வந்துட்டம்ல என வெடித்திருக்கிறார் தமிழிசை.
தளபதி விஜய், ஏஆர் முருகதாஸ்,கலாநிதி மாறன் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. விளாசித் தள்ளி இருக்கிறார். தலைவி வாயைத் திறந்திருப்பதால் இனி ராஜாவும் சவட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
தமிழிசையின் தாக்குதல் இதோ……!
“முதல்வர் பதவி ஆசையுடன்தான் நடிக்கவே வருகிறார்கள்.அந்த கனவுடன் வருகிறவர்கள் சினிமாவில் மட்டுமே முதல்வர் ஆக முடியும். அரசியலில் வரவே முடியாது.
சொந்தமாக கதை பண்ணத் தெரியாமல், கள்ளக்கதையை படம் எடுப்பவர்கள்தான் இன்று கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கிறார்கள்.
இது கார்ப்பரேட்டுகளின் காலம் இல்லை.காமன் மேன்களின் காலம்.விஜய்யிடம் நேர்மை இல்லை. இனியாவது பொது வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்” என சொல்லி இருக்கிறார் தமிழிசை.