இது என்ன கூத்து?
சர்கார் படத்தை திரையிட முடியாது என்று தஞ்சையில் உள்ள ராணி திரை அரங்கம் மறுத்திருக்கிறது,இதை அவர்கள் தங்களது முக நூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஏன் தளபதி விஜய்யின் படத்துக்கு மறுப்பு!
‘சர்கார்’ படத்தை திரையிட்டால் முதல் இரண்டு நாட்களின் காட்சிகளின் டிக்கெட்டுக்களை பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என விநியோகிஸ்தர்கள் கட்டாயப்படுத்திஇருக்கிறார்கள் என்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
அப்படியானால் சர்கார் படம் வெளியாகும் ஒவ்வொரு தியேட்டரிலும் இத்தகைய நிலைமைதானே?
அப்படியானால் அரசு நடவடிக்கை எடுக்கலாமே?