தமிழ்த் தாய் வாழ்த்து தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகம்.
அந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஓர் ஆணை.!
“பல்கலைக்கழகத் தேர்வுகள் தமிழில் எழுத அனுமதி இல்லை.!”
அந்நிய மொழியான ஆங்கிலத்தில் எழுதலாம்.
என்ன கொடுமை என்கிறீர்களா? தமிழகத்தில் காவல்காரர்கள் இல்லை என்கிறபோது எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் தமிழ் மக்கள்.
கவிஞர் வைரமுத்து பா.ம.க.தலைவர் ராமதாசை ஆதரித்து பதிவு செய்திருக்கிறார்.