
‘தல ‘ அஜித்துக்கு தலை கிறுகிறுத்து விடும் அளவுக்கு வாசிப்பு. தீபாவளிக்கு அஜித் படம் வராத குறையை ‘பில்லா பாண்டி’ தீர்த்து விடுவான் என்கிற நம்பிக்கை. தீர்த்தானா இல்லையா என்பதை தீபாவளி சொல்லி விடும்.
தல ரசிகனாக ஆர்.கே,சுரேஷ். முழு நேர கதாநாயகன். கட்டிடத் தொழிலாளி. அஜித்தின் ரசிக வெறியர். வில்லங்கம் என்று வந்து விட்டால் வெட்டு,குத்து வரை போகக்கூடியவர்..முதல் பாதியில் கதை எந்த திசை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமல் அஜித் புகழ் பாடுகிறது. ஹீரோவின் ஊர்ப் பெயரில் கூட ‘தல’ இருக்கிறார் ,அணைத்தலப்பட்டி.! ஒரு கட்டத்தில் அஜித் புகழ் சலிப்பைத் தருகிறது. வெண்ணிற ஆடை மூர்த்தியின் இடம் தம்பி ராமையாவுக்குத்தான்! வசனத்தில் மனிதருக்கு இரட்டைபதக்கம் தரலாம்,
வில்லனாக வந்து போய்க்கொண்டிருந்த சுரேஷ்க்கு கதாநாயக வேடம். கனத்த குரல்,கம்பீர தோற்றம்.அடி ,உதை கொடுப்பதை ரசிக்க முடிகிறது.
இந்துஜா,சாந்தினி என இரண்டு நாயகிகள்.
கிராமத்துப் படங்களுக்கு மிகவும் பொருந்திப்போகிற மாரிமுத்து.இயல்பான நடிப்பு.
தயாரிப்பாளர் கே.சி.பிரபாத்.முக்கிய வேடம்.
சங்கிலி முருகன் கேரக்டர் மனதில் ஒரு கோடு கிழித்து விட்டு மறைகிறது.
விதார்த் ,அளவுக்கு சூரியின் பங்கு இல்லை.என்றாலும் சிறப்புத் தோற்றமாம்.
படத்தின் பிற்பாதியில் எடிட்டர் ராஜாமுகமது கத்திரி போட்டிருக்கலாம்.
பில்லா பாண்டி …பொல்லா பாண்டி.
2/5.












