எவ்வளவு பெரிய பூட்டைப் போட்டு பூட்டினாலும் திறந்து விடுகிறார்கள் தமிழ் ராக்கர்ஸ். திருடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்களோ என்னவோ!
“பார்த்துவிடுவோம் ஒரு கை” என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடியை வைத்துக் கொண்டு காத்திருந்தது,அந்த தடியை கொண்டே சங்கத்தின் மண்டையை பிளந்துவிட்டார்கள். தயாரிப்பாளர் கசாலி வாட்ஸ் அப்பில் வந்து கதறுகிறார்.”கல்லைப் போட்டுட்டாங்க தமிழ் ராக்கர்ஸ்.”
எப்படி அவர்களால் திருட முடிகிறது?
வெளிநாடுகளுக்கு செல்லும் படத்தின் பிரிண்டுகளை வாங்கும் தியேட்டர்காரர்களில் சிலர் ராக்கர்ஸ் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.ஆனால் கேள்விப்பட்ட செய்தி உண்மையாக இருந்தால் திருட்டை ஒழிக்கவே முடியாது..
தகவல் ஒளிபரப்புத் துறை தடை செய்திருக்கிறபோது எப்படி அவர்களால் இணையத்தில் அரங்கேறி ஆட முடிகிறது.