தமிழக வரலாற்றில் கல்வெட்டாய் பதிவாக வேண்டிய நிகழ்வு ஜல்லிக்கட்டு போராட்டம். அதாவது மெரீனா புரட்சி. தமிழர்களின் விளையாட்டான காளை அணைதலை மீட்டெடுப்பதற்கான களமாக அமைந்திருந்தது மெரீனா. இனம் மொழி கடந்து மக்கள் கலந்து கொண்ட போராட்டம். அமைதியான போராட்டம் சகுனிகளின் சூழ்ச்சியால் தடியடியில் முடிந்தது.
இதை மையமாக வைத்து எம்.எஸ்.ராஜ் இயக்கிய படத்தின் பெயர் மெரீனா புரட்சி.
படம் முடிந்து மாநில தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
முதல் கட்டை. இங்கு விழுந்தது. “ரிவைசிங் கமிட்டிக்குப் போ!”
அட அங்கு நம்ம கவுதமிதானே தலைவி. புரட்சிக் கருத்துகளை சொல்லுகிறவர் ஆயிற்றே!
அவரும் போட்டார் பாருங்க பெரும் கட்டையை ! “அனுமதிக்க மாட்டோம்!”
“சரி காரணத்தை சொல்லுங்க?”
மவுனம்.!