சர்கார் படத்தில் வருகிற”கோமளவல்லி கேரக்டர் ஜெயலலிதாவை குறிப்பிடவில்லை” என்கிறார் டி.டி.வி.தினகரன்.
ஆனால் படம் பார்த்தவர்கள் ‘ஜெ’ யைத்தான் உணர்த்தி இருக்கிறார்கள்.
“டி.வி.யை உடைக்கும் காட்சி ஏன் இல்லை? என்பதும் தினகரன் கேள்வி.அவர் எந்த படம் பார்த்தார் என்பது தெரியவில்லை. இயக்குநர் முருகதாஸ் படத்தில் உடைப்பாரே அது என்ன இஸ்திரி பெட்டியா?
ஆனால் அதிமுக தொண்டர்கள் கொடி பிடித்துக் கிளம்பியிருக்கிறார்கள்.சென்னை, .மதுரை,கோவை ஆகிய பெருநகரங்களில் சர்கார் ஓடுகிற தியேட்டர்களை முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.ரசிகர்கள் பயந்து போய் இருக்கிறார்கள். சில தியேட்டர்களில் பாதுகாப்பு அளித்திருந்தாலும் பெரும்பான்மையான தியேட்டர்களில் போலீஸ் இல்லை. எந்த நேரமும் கலாட்டா நடக்கலாம் என்கிற நிலைமை.
இதுதான் சர்காரின் தற்போதைய நிலவரம்.