சர்கார் படப் போராட்டத்தின் நிஜமான உச்சக் கட்டம் இனிதான் ஆரம்பமாகும் ! முதல்வர் மவுனம் களைந்து காரமாகி இருக்கிறார். “ஏய், இனிமே நானும் ஜெயலலிதாதான்! “என முண்டா தட்டிவிட்டார்.
“சர்கார் படத்துக்கு எதிராகக் கடுமையாகப் போராட சர்கார் படக் காட்சிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடந்திருக்கிறது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, `நானும் ஜெயலலிதாதான்’ என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறது. சர்கார் பட விஷயத்தில் நாம் தினகரனையும் கார்னர் செய்ய வேண்டும். ‘அம்மாவுக்கு நாம்தான் உறுதியான விசுவாசிகள்’ என்பதைக் காட்டுவதற்காகக் கிடைத்த வாய்ப்பு இது. சர்கார் மூலமாக இதைச் சாதித்துவிடுங்கள். சொல்லப் போனால், இந்த விஷயத்தில் வான்டடாக வந்து விஜய் சிக்கியிருக்கிறார். `தலைவா’ படத்துக்கு அம்மா செய்ததுபோல `மெர்சல்’ படத்துக்கு நாம் எதிராகச் செயல்படவில்லை. “என்று கடுமையுடன் பேசி இருக்கிறார்.
அங்கே இங்கே கை வைத்துவிட்டு இப்போது நமது அடி மடியில் கை வைக்கப்பார்க்கிறார்கள்.. இதை அரசியல் விவகாரமாக மாற்றுவோம். விஜய் ஒரு தனி மனிதர்தான். அவரை எந்தக் கட்சியும் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. தினகரனும் அவரும் சேர்ந்தால் சேர்ந்து கொள்ளட்டும். இரண்டு பேருமே அம்மாவுக்கு எதிரிகள்தான் என்பதைக் காட்டுங்கள். அடுத்து வரப் போகும் `பேட்ட’ ரஜினிக்கும் இது ஒரு பாடம்” எனக் கூறியிருக்கிறார்.
அப்படியானால் இனிமேல்தான் கச்சேரி கலை கட்டும்னு சொல்லுங்க!