ஊரே சர்கார் பட விவகாரத்தில் ‘மணம்’ பரப்பி வரும் நேரத்தில் அமைதியுடன் இருக்கிறார்கள் சினிமா பிரபலங்கள்.! உலகநாயகன் , சூப்பர் ஸ்டார், இவர்களுடன் இன்னும் பல சங்கத் தலைமைகளும் மூச்சடங்கி கிடக்கின்றன.
எதுக்குய்யா வம்பு ? நாளைக்கு நம்ம படமும் வரணும்ல. வாயைக் கொடுத்து துயரத்தை தூக்கிச் சுமக்கணுமா? என ஒதுங்கிக் கிடக்கிறார்கள்.
ஆனால் சிம்புவின் ரசிகர்கள் தங்களின் தலைவர் நடித்து வரும் படத்துக்காக இப்பவே சுவர்களை வண்ண மயமாக்கி வருகிறார்கள். மதுரையில் இடிந்து கிடக்கிற சுவரை கூட தங்கள் தலைவரின் இருப்பிடமாகக் கருதி படம் வரைந்து வணங்கி வருகிறார்கள். எஸ்டிஆர் இருக்குமிடம் எங்களுக்கு கோவில் அய்யா!