‘சண்டக்கோழி 2’படத்தை அடுத்து, விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில், ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.இவர்களுடன்,பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், விஷால் அடுத்ததாக இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார். நாயை மையமாக வைத்து புதிய படம ஒன்றை இயக்கவுள்ளாராம். விஷால் இயக்குனர் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாம்.