சர்கார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆளும் கட்சியினருக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாகவும், அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயிட்டு எரிப்பது போன்ற காட்சிகளை வைத்துள்ளதாகவும், அப்படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கு எதிராக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஏ ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, .நள்ளிரவில் என் வீட்டுக்கதவை போலீசார் பலமுறை தட்டினர் ,நான் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் திரும்பிச் சென்றனர்..என வேதனையுடன் இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.