சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் படம் மறு தணிக்கைக்கு சென்று சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்து . இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் முன் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் நள்ளிரவில் தனது வீட்டின் கதவை தட்டி, தன்னை காவல்துறையினர்தேடியதாகவும், இத்தகைய சூழலில் , தான் கைது செய்யப்படலாம் என்பதாலும் ஜாமீன் கோருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல்எடுத்துகொள்ளப்பட்டது..இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்.சர்கார் படத்தில் மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றுடன் சேர்த்து ‘டிவி’ யையும் எரித்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமா?என்றும் கேள்வி எழுப்பியவர், படத்திற்கு மத்திய தணிக்கைகுழு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டவர் ,இயக்குனர் முருகதாஸின் முன்ஜாமீன் மனுவை வரும் நவம்பர் 27ஆம் தேதி அன்று ஒத்திவைத்து அதுவரை இயக்குனர் முருகதாஸை வரும் 27ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.