‘தீபாவளியன்று வெளியாகும் ‘சர்கார்’ படத்தை எச்.டி. பிரிண்டில் அன்றைய தினமே வெளியிடுவோம்’ என தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டது. இப்பதிவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கமும்இது குறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சு வாரத்தை நடத்தி திரையரங்கில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் அறிவுறுத்தியது. ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாத தமிழ் ராக்கர்ஸ், சொன்னது மாதிரியே சர்கார் படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டது. திரையுலகில் இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தற்போது வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில்,சர்கார் படம் வெளியான அன்றே இணையதளத்தில் பதிவேற்றியது போல் ரஜினியின் 2.0 படமும் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் தற்போது மீண்டும் மிரட்டல் டுவிட் செய்து உள்ளது.இது 2.0 படக்குழுவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.