தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார்..ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.செல்வராகவனின் என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையாததால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோர்வை உண்டாக்கியது. இதற்கிடையில்,கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து புதுடெல்லியை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் அனைத்தும் புதுடெல்லியில் படமாக்கப்பட்டும் வந்தது. விரைவில்,நியூயார்க், பிரேசில் போன்ற வெளிநாடுகளிலும், ஹைதராபாத் போன்ற வெளிமாநிலங்களிலும் படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் நவம்பர் மாத இறுதியில் செல்வராகவனின் என்.ஜி.கே.படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க உள்ளதாம். இச் செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து 20 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன. இப்படம் வரும் ஜனவரி 26 குடியரசு தினம் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.