ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டடித்த இந்தியன். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேனாதிபதி பேக் என தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.இது குறித்து இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் இந்தியன் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றை வெளியிட்டு உறுதி படுத்தினார்.இந்த படத்தில் கமல்ஹாசன் சேனாதிபதி, மகன் என இரு வேடங்களில் நடிக்க உள்ளார். நாயகியாக நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால் நடிக்க உள்ளனர். அஜய்தேவ்கான் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.அனிருத் இசையமைக்வுள்ள இப்படத்தில், மேலும் ஒரு முக்கிய வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் புத்தாண்டில் தொடங்க உள்ளன.2020 -ல் இப்படம் வெளியாகும் என்கிறது படத் தரப்பு .