தமிழ், தெலுங்கு, மலையாளம், அல்லது கன்னட சினிமாவோ, பணியிடத்தில் நடிகைகளின் பாதுகாப்பு மற்றும் வசதி உறுதிப்படுத்தப் பட வேண்டும். படவாய்ப்புக்காக பெண்கள் பாலியல் வற்புறுத்தல்களுக்குப் பலியாகக் கூடாது. இணங்காவிட்டால் வாய்ப்புகள் பறிபோய் விடும் என்ற பயம் நீங்க வேண்டும்.பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றும் பெண்கள் முக்கியமாக பாதுகாப்பாக உணர வேண்டும். இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து சினிமாத் துறைகளும் ஒன்றிணைந்து பெண்களுக்கு படப்பிடிப்பு அரங்குக்கு வெளியேயும் உள்ளேயும் தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.சமீபத்தில் வெளியான என்னுடைய ‘சண்டக்கோழி 2’ படத்தில் இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷும் வரலட்சுமி சரத்குமாரும் நடித்தனர். அவர்களுக்கு படக்குழு சார்பில்,முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.என்னுடைய படங்களில் நடிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். அதே பாதுகாப்பை நாடு முழுவதும் உள்ள சினிமாத் துறையினர் கொடுக்க வேண்டும்.மீடூ இயக்கம் எங்கோ ஓர் இடத்தில் சுய லாபத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் மீ டூ பயன்படுத்தப்படுகிறது.கண் விழிக்கும்போது என்னுடைய பெயரைக் கேட்க வேண்டிவருமா என்ற பயத்துடன் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இந்த அவநம்பிக்கை, பயம், சந்தேகம் ஆகிய சூழல் நீக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகர்களின் பெயர்களைக் களங்கப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.வற்புறுத்தலுக்கும் இணங்கி உறவு கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. திரைத்துறையில் நான் இரண்டு பெண்களுடன் ‘டேட்டிங்’ செய்திருக்கிறேன். அதற்காக அவர்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று அர்த்தம் ஆகாது” இவ்வாறு தனியார் செய்திநிறுவனம் ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.