இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் தி அயர்ன் லேடி படத்தில்,ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்க உள்ளார். இது குறித்து நித்யா மேனன்கூறியதாவது,’ இது மிகப்பெரிய படம். பிரியதர்ஷினி என்னிடம் கதை சொன்னபோது மிகவும் பிடித்திருந்தது. ஒரு பயோபிக் படம் பண்ணும்போது முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு நியாயமான, தேவையான நடிப்பை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டேன். இப்படத்தில் நடிப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். மீடூ இயக்கத்தை பொருத்தவரை நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான விஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் மீ டூ குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அனுகுமுறையை கையாளுகிறேன் . எனது வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன். இதுபோன்ற எனது எதிர்ப்பு செய்கைகளினால் சில படங்களிலிருந்தும் வெளியேறி இருக்கிறேன். நான் வேலைபார்க்கும் இடத்தில் எப்படி இருக்கிறேன், என்னுடைய செயல்பாடுகள் என்ன? மற்றவர்களுடன் நான் எப்படி நடந்துகொள்கிறேன் ஆகியவை மட்டுமே இதுபோன்ற விஷயங்களுக்கு நான் எதிரானவள் என்பதை என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு புரியவைக்கும் என்கிறார் நடிகை நித்யாமேனன் .