தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை சங்கத் தேர்தல் இன்று நடந்தது.இதில் கன்னட திரையுலகைச் சேர்ந்த ஹெச்.பி.கங்காராஜ் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட் டார்.இன்று மாலை புதிய நிர்வாகிகள் சங்க அலுவலகத்தில் நடக்கும் விழாவில் பதவியேற்றுக்கொள்கின்றனர்
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை சங்கத் தேர்தல் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.இதில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட திரையுலகைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவர் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை சங்கத் தேர்தல் அதன் அலுவலகத்தில் நடந்தது.காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை மூன்று மணி வரை நடந்தது.இதில் கன்னட திரையுலகைச் சேர்ந்த ஹெச்.பி.கங்காராஜ் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட் டார்.துணைத்தலைவர்களாக பிசெங்கையா ,ஆர்.மாதேஷ்,எம்.ஒ.சாகுல் ஹமீது.எஸ்,முருகன்.ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்., இரண்டு செயலாளர் பதவிக்கு ,டி,ஏ. அருள்பதி, மட்டும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார் .இன்னொரு செயலாளர் பதவிக்கு,.காட்ரகட்டபிரசாத்,சீனிவாஸ் சுந்தர் ஆகியோர் போட்டியிடுவாதால் இவர்களின் வெற்றி குறித்து வருகிற 7-ந்தேதி அறிவிக்கப்படும்.பொருளாளர் பதவிக்கு கோபால்தாஸ்ஜெகநாததாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழு உறுப்பினர்களாக அன்பாலயா பிரபாகரன்,அழகன் தமிழ் மணி,என்.ராமசாமி,பிரமிட் நடராசன்,சுரேஷ் பாலாஜி,ரவிகொட்டரக்கரா,ஜி.வி.ருக்மாங்கதன்,குட்டி பத்மினி,ஆர்.கே.வெங்கடாத்ரிஉள்ளிட்ட 36 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை சங்க அலுவலகத்தில் நடந்தது.