‘மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ்’ நந்தகோபால், தான் தயாரிப்பில் வெளியான படங்களின் ஹீரோக்கள் விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனைக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதால், தென்னிந்திய நடிகர் சங்கம் இனி வரும் காலங்களில் அவருக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என்ற அறிக்கை நடிகர் சங்கத்தின் சார்பில் வெளியானது.
இந்நிலையில் தயாரிப்பாளர் நந்தகோபால் கூறியதாவது, என்மீதான புகாரை ஒரு சிலர் மட்டுமே முடிவெடுத்து அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. ஏன்னா,தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி போல வந்திருக்கிறது.
இதுவரை நான் தயாரித்த அனைத்து திரைப்படங்களையும் எனது மனசாட்சிக்குட்பட்டு நேர்மையாகத்தான் தயாரித்துள்ளேன். ‘96’ படத்தில் நாயகனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் வழங்கிவிட்டேன்.
இது விஷயமாக தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி எடுக்கிற எந்த முடிவுக்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள்கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்கவில்லையெனில் நான் டெல்லியில் உள்ள Office of the Director General of Competition Commisiion of India என்கிற அமைப்பில் வழக்கு தொடுக்க வேண்டி வரும்…” என்று எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர் நந்தகோபால்.திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினுள் மோதல்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு,அது குறித்து முழுமையான பதில் திங்கள் கிழமை தெரிவிக்கிறேன் எனவும் நந்தகோபால் தெரிவித்தார்.
எல்லாம் சரி. பவுன்ஸ் செக் வைத்திருக்கிறாரே விக்ரம் பிரபு?