எதித்து அடிக்கலேன்னா இவ்வளவு ஆள்,அம்பு சேனை ,வைத்திருந்து என்ன பலன்? டி.வி. வானொலி,பத்திரிக்கை என திராவிட நாட்டையே ஆண்டு கொண்டிருக்கும் ‘ சன் ‘ நிறுவனத்தை இந்த அரசு அசைத்திட முடியுமா? மத்திய அரசே கேஸ் போட்டும் இவர்களை புரட்ட முடியவில்லை. அதிமுக அரசு என்ன செய்ய முடியும்? ‘ சர்கார் ‘ வெற்றி விழாவில் நாங்க யார் என்பதை காட்டி விட்டார்கள். தளபதி விஜய், முருகதாஸ் அணியினர். ஏஆர்ரகுமான்,வரலட்சுமிசரத்குமார், சிமிட்டாங்காரன் பாடலாசிரியர் விவேக் ஆகியோரையும் படத்தில் காணலாம்.
வெட்டப்பட்ட காட்சிகளின் பிரதான இலவசங்களான மிக்சி, கிரைண்டர் ஆகியவைகளை கேக்கில் வடிவமைத்து வெற்றி விழாவை கொண்டாடி இருக்கிறார்கள்.