“நான் அன்பானவனா மாறி ஒழுங்கான ரூட்டுல போறேன். போறவனை கல்லைக் கொண்டு எறிஞ்சா என்னடா அர்த்தம் …நான் பொறுத்துக்கலாம் ரசிகர்கள்?”
இப்படி சிம்புவை நினைக்கவைத்து விடுவார்கள் போலிருக்கிறது. உடல் நலமில்லை என்றாலும் தொடர்ச்சியாக படப்பிடிப்புக்குப் போய்க் கொண்டிருக்கிறது அந்த நல்ல பிள்ளை. “மாறிட்டேன்.என் வழி தனி வழி,அது யாருக்கும் இடர் செய்யாத அன்பு வழி “என சுந்தர்.சி.யின் படத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். 90 சதவீத வேலை முடிந்து விட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் .
“ஆனால் பொங்கலுக்கு வரக்கூடாது என்று திட்டமிட்டு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் ,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் கூடிப் பேசி படத்துக்கு ரெட் போட்டுவிட்டார்கள்” என சிம்பு ரசிகர்கள் சூடாகி இருக்கிறார்கள்.
சிம்பு தரப்பில் விசாரித்தபோது….
“அன்பானவன்,அசராதவன், அடங்காதவன் படத்தை எவ்வளவுக்கு வித்தார்னு சொல்லச்சொல்லுங்க? எங்க தலைவருக்கு நாலு கோடி சம்பளப்பாக்கி.அதையும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.இப்ப ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன் ‘படம் பொங்கலுக்கு வந்திடக்கூடாதுன்னு யாருக்காகவோ தடை பண்ணிருக்காங்க. ரஜினி சார் படம் பொங்கலுக்கு முன்னாடியே வரலாம்னு எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு. விஷால் ஒருதலைப் பட்சமாக நடந்திருக்கார்.”என்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் விஷாலுக்கு எதிராக அவரது படத்துக்கு செருப்பு மாலைகள் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கிறார்கள்.
ஊருக்கெல்லாம் குரல் கொடுக்கிறவர் இந்த சிம்பு. தளபதி விஜய்க்கு பிரச்னை வந்தபோது முதல் ஆளாக நின்றவருக்கு விஜய் குரல் கொடுக்க வேணாமா?