தமிழ்நாடு, ஆந்திரம்,தெலுங்கானா ,இந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் பணத்தைக் கொட்டி ,கொட்டி கோலார் தங்கச்சுரங்கத்தை வெட்டி இருக்கிறார்கள் .
எஸ், படத்தின் பெயர் கே.ஜி.எப்.
நான்கு வருட உழைப்பு. பலன் இல்லாமலா போகும்.? பாகுபலி,2, ரஜினியின் 2.0 ஆகிய இருபடங்களுக்கு இணையாக தயாரித்திருக்கிறார் கன்னடத்து தொழிலதிபர் விஜய் கிரந்தர். படத்தை இயக்கி இருப்பவர் பிரசாந்த் நீல்.
ஐந்து மொழிப் படங்களின் முன்னோட்ட விழாவை பெங்களூருவில் திணற,திணற கொண்டாடி விட்டார்கள். இவர்கள் கொண்டாடிய நேரம், நகரம் முழுவதும் கன்னடக் கொடி! ரயில் நிலையத்தின் உச்சியிலே ஜாம் ஜாமென பறந்தது.
நமக்கு வருத்தம் .இந்த மாதிரி தமிழ்நாட்டுக்கும் கொடி இல்லையே!
ஐந்து மொழிகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் பி.வி.ஆர் தியேட்டரை நிறைத்து விட்டார்கள்.
படத்தின் ஹீரோ யார்?
நடிகர் யாஷ் , கர்நாடகத்தில் ராக்கிங் ஸ்டார் என கொண்டாடப்படுகிறவர். ரசிகர்கள் இவரை தலை மீது தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்டின் ,விஜய், அஜித், சிம்பு கலந்த கலவையாக இருக்கிறார். கே.ஜி.எப் .பட முன்னோட்டத்தில் இடி மின்னல் மழை எல்லாம் கலந்த பெரும் சினிமாவாக இருந்தது.
நான்கு வருடத் தயாரிப்பா?
“ஆமாங்க. நடிகர் யாஷ் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இந்த படத்துக்கு மட்டுமே நாலு வருஷமாக கால்சீட் கொடுத்திருக்கிறார்.. டைரக்டர் பிரசாந்த் ஆராய்ச்சி பண்ணி எடுத்திருக்கிற படம். மும்பையில் ஸ்டார்ட் ஆகி கோலார் தங்க வயலுக்கு வந்து சேருகிறது..தமிழர்கள் வாழும் இடமாச்சே ,படத்தைப் பார்த்ததுமே தமிழக உரிமையை நடிகர் விஷால் வாங்கி விட்டார்.”
“அப்படியா சேதி, அதான் அப்பா ஜி.கே.ரெட்டியுடன் விஷால் வந்து இருந்தாரா? விஷாலுக்கு தனி மரியாதை.அப்பா ஜிகே ரெட்டி கேஜிஎப் படக்குழுவினரை பாராட்டித் தள்ளி விட்டார். இதுவரை கன்னடத்தில் எந்தப்படமும் இந்த அளவுக்கு செலவு செய்யப்படவில்லை என்றார்கள். அவர்களுக்கு இந்தப்படம்தான் பாகுபலி.2, ஷங்கரின் 2.0.”
கதை என்ன?
“டைரக்டர் பிரசாந்த் நீல் மூச்சு விடுவாரா என்ன? “