உண்மையைச் சொல்றது நல்லதுதான்.
அதற்காக அந்தரங்க ரகசியம் பற்றி பொதுவெளியில் பகிரலாமா?
கரீனாகபூர் அழகு பார்த்து பெருமூச்சு விடாத ரசிகனே இல்லை. மொட்டவிழ்க்காத ரோஜாவைப் பார்த்தே ஜொள்ஸ் விட்டவர்களிடம் மலர்ந்த ரோஜாவை முகர்ந்து ரசித்தவர் பட்டவர்த்தனமாக சொல்லலாமா?
‘காபி வித் கரன் என்பது ஒரு நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியில் இருவர் கலந்து கொள்வார்கள். அன்று சயீப் அலிகானுடன் கலந்து கொண்டவர் சாரா அலிகான். முதல் மனைவி வழியாக பிறந்த அவரது மகள்.
சயீப் அலியின் தற்போதைய மனைவி கரீனா கபூரின் ஜிம் போட்டோக்களை ரகசியமாக படம் எடுத்து வெளியிட்டு விட்டார்கள்.
“இப்படி உங்க சம்சாரத்தின் ஜிம் போட்டோக்களை வெளியிட்டு விட்டார்களே ,இது சரிதானா?” —இது கேள்வி.
“அதனால் என்ன” என்கிற ரீதியில் பதில் சொல்கிறார் புருஷன் சயீப்.
“பெட்ரூம்ல நான்தான் ரொம்பவும் குளோசப்ல பாக்கிறேனே !”
அப்பாவின் இந்த பதிலால் மகள் சாரா அலிகான் கூசிப் போனார் காதுகளை பொத்தியபடி!