அம்பானி மகளின் கல்யாண அழைப்பிதல் ஒன்றின் விலை 3 லட்சமாம் .ஆனால் மனைவிக்கு கணவர் காட்டும் அன்புக்கு விலை மதிப்பிட முடியுமா?
மனைவி தொடர் காய்ச்சலில் படுத்து விட்டாலே போதும், சில கணவன்களுக்கு அலுப்புத் தட்டிவிடும். பணக்காரனாக இருந்தாலும் படுக்கைக்கு மனைவி பயன்படவில்லை என்றால் வெறுக்கத் தொடங்கி விடுவான்.
ஆனால் நடிகை சோனாலி பெந்த்ரேயின் கணவர் கோல்டி பெஹ்ல்?
சொக்கத் தங்கம் அய்யா! மனைவிக்கு புற்று நோய் என்பது தெரிந்தும் பக்கத் துணையாக இருக்கிறார்.
அவர்களுக்கு 16 ம் ஆண்டு கல்யாண நாள்!
உருகி இருக்கிறார் சோனாலி.!
“எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. மனதில் தோன்றுகிற உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கத் தெரியவில்லை. அத்தனையும் உயிர் உள்ளவை. புற்று நோய் என்பது தனி ஆளாக நின்று போரிட இயலாதது.ஒட்டு மொத்த குடும்பமும் போரிட வேண்டும். அன்பு ,பாசம், நேசம் இவைதான் முக்கியம். எனது கணவராக மட்டுமில்லாமல் நல்ல நண்பர், தோழர் ,என துணையாக இருக்கிறார்.” என நெகிழ்ந்திருக்கிறார்.